முகப்பு அண்மை செய்திகள் ரோகிணி ஐ.ஏ.எஸ்., ரூபா ஐ.பி.எஸ். இடையே மோதல் உச்சக்கட்டம்- அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

ரோகிணி ஐ.ஏ.எஸ்., ரூபா ஐ.பி.எஸ். இடையே மோதல் உச்சக்கட்டம்- அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி குறித்து ஊடகங்களில் பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு மார்ச் 7- ஆம் தேதி வரை தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ரோகிணிக்கு எதிராக 19 கேள்விகளை முன் வைத்திருந்த ரூபா, ரோகிணியின் ரகசிய படங்களையும் ஊடகங்களில் வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவர்கள் இருவரும், தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களில் இருவரும் எந்த விதமான கருத்துகளையும் கூறக் கூடாது என்றும் கர்நாடகா அரசு உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், ரோகிணி குறித்து பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பதை ரூபா நிறுத்தாமல் தொடர்ந்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு ஷெசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரோகிணி, தன்னைப் பற்றி பேசுவதற்கு ரூபாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையீட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஷெசன்ஸ் நீதிமன்ற நீதிபதி, வரும் மார்ச் 7-ம் தேதி வரை ரோகிணி குறித்து பொதுவெளியில் பேச ரூபாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version