முகப்பு அண்மை செய்திகள் 350 தியேட்டர்களில் திரையிடப்பட்ட ‘தலைநகரம் 2‘– சந்தோஷத்தில் சுந்தர்.சி

350 தியேட்டர்களில் திரையிடப்பட்ட ‘தலைநகரம் 2‘– சந்தோஷத்தில் சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘தலைநகரம்‘. இதனையொட்டி தற்போது இதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்கியுள்ளார்.

இதில் சுந்தர்.சி, பாலக்  லல்வாணி, ஐரா, பாகுபலி பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் வெற்றியடைந்திருப்பதாக கூறி தயாரிப்பு தரப்பு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சுந்தர்.சி பேசியதாவது, “இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன். அதற்கு அவர் 350-க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன்.

இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ‘தலைநகரம் 2‘ திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. ‘தலைநகரம் 2‘ ஒரு எமோஷனல் ஆக்ஷன் படம். ஒவ்வொரு ஆக்ஷனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும்.

நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள். இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றிக்கு அவர்களே சாட்சி “ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version