முகப்பு அண்மை செய்திகள் ‘மாவீரன்‘ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

‘மாவீரன்‘ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘பிரின்ஸ்‘ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் படம் ‘மாவீரன்‘. இப்படத்தை ‘மண்டேலா‘ படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள நிலையில், வரும் ஜூலை 14-ம் தேதியன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ‘வண்ணாரப் பேட்டையிலே‘ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 2-ம் தேதி அன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து வீடியோவாக வெளியிட்டு இதை அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version