முகப்பு அண்மை செய்திகள் ‘விஜய்யை வைத்து கண்டிப்பாக படம் பண்ணுவேன்‘ – வெற்றிமாறன் பேட்டி

‘விஜய்யை வைத்து கண்டிப்பாக படம் பண்ணுவேன்‘ – வெற்றிமாறன் பேட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ‘விடுதலை‘ படம் வெளியாகி, மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்‘ என்ற படம் இயக்கப் போவதாக கடந்த 2020-ம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. அதையடுத்து அப்படத்துக்கான டெஸ்ட் சூட் ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் களமிறங்கும் சூர்யா காளையுடன் மல்லுக்கட்டும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதை சூர்யாவின் கடந்த ஆண்டு பிறந்தநாளின் போது வெளியிட்டிருந்தார்கள்.

அதன்பிறகு அந்தபடம் குறித்த எந்த அப்டேட்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெற்றிமாறனிடத்தில் ‘வாடிவாசல்‘ படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், தற்போது வாடிவாசல் படத்தின் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது.

அதனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிந்ததும் வாடிவாசல் படம் தொடங்கப்படும். தற்போது சூர்யா பயிற்சி எடுத்து வரும் ஜல்லிக்கட்டு காளை போன்று, ரோபோ காளை ஒன்றையும் தான் உருவாக்கி வருவதாகவும், அதற்கான வேலைகள் நடப்பதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

மேலும் விஜய்யை வைத்து படம் இயக்குவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், “ நடிகர் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவது குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம். அவரும் என் படத்தில் நடிக்க தயாராக உள்ளார். கைவசம் உள்ள படங்களை முடித்த பின் நிச்சயம் விஜய்யுடன் இணைவேன். அந்த நேரம் நான் சொல்லும் கதை அவருக்கு பிடிக்க வேண்டும் “ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version