பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் தான். ஆனால், அதை சில ரசிகர்கள் மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு தவறான முறையில் ஈடுபடுகிறார்கள். சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் இது போன்ற விஷயங்கள் நடக்கும். ஆனால், தற்போது நேரிலேயே ஒரு போட்டியாளருக்கு ரசிகர்களால் அதிர்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிக் பாஸ் தெலுங்கு பைனல் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல்லவி பிரஷாந்த் என்பவர் தான் டைட்டில் வென்றார்.
அமர்தீப் மற்றும் பல்லவி பிரஷாந்த் இருவர் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரஷாந்த் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், வெற்றிபெற்ற பல்லவி பிரஷாந்தின் ரசிகர்கள் பலரும், கூட்டமாக திரண்டு அமர்தீப் காரை தாக்கியுள்ளனர். அவர் சென்று கொண்டிருந்த காரை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள் பலரும், காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம்.
