தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் படம் ‘சலார்‘. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரித்விராஜ் வில்லன் கலந்த நண்பனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவருக்கும் நெருங்கிய நட்பு உருவாகிவிட்டது. இவர்களுடைய நட்பு எந்த அளவிற்கு என்றால் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பிரபாஸுக்கு போன் செய்து ஒரு தேவை என்று சொன்னால் உடனடியாக அதை நிறைவேற்றித் தருவார் என்று கூறுகிற அளவுக்கு என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ்.
மேலும் பிரபாஸ் பற்றி அவர் கூறும்போது, “ பிரபாஸ் தன்னை சுற்றியுள்ள அந்த புகழ் வெளிச்சம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருப்பவர். அதோடு, தன்னுடன் பழகுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வசதியாக வைத்துக் கொள்வார்.
பிரபாஸ் பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் நிச்சயம் அவரிடம் நட்பு பாராட்டாமல் இருக்க முடியாது“ என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பின் போது பிரித்விராஜூக்கு வழங்கப்பட்ட கேரவனை தன்னுடைய கேரவனை போன்றே மாற்றி தரும்படி அதன் வடிவமைப்பாளருக்கு உத்தரவிட்டு மாற்றி கொடுத்துள்ளார் பிரபாஸ்.
