முகப்பு அண்மை செய்திகள் வித்தியசமான கதைக்களத்தில் களமிறங்கும் நடிகர் ஜெயம் ரவி

வித்தியசமான கதைக்களத்தில் களமிறங்கும் நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அகிலன்‘ படத்திற்கான படப்பிடிப்பை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ‘சைரன், இறைவன்‘ ஆகிய  படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் ‘சைரன்‘ படத்தில் ஒரு கைதி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகவும், அனுபமா பரமேஸ்வரன் இன்னொரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தில் மாறுபட்ட லுக்கில் இருக்கும் அவர் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version