முகப்பு அண்மை செய்திகள் மார்ச் 9- ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

மார்ச் 9- ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் மாதம் 9- ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், முனைவர் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்பட 35 தமிழக அமைச்சர்களும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. கலந்துக் கொள்கின்றனர்.

2023- 2024ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. அத்துடன், தமிழகத்துக்கான புதிய தொழில் முதலீடுகள், அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version