முகப்பு அண்மை செய்திகள் ‘கஸ்டடி‘ படப்பிடிப்பை முடித்துள்ள வெங்கட் பிரபு

‘கஸ்டடி‘ படப்பிடிப்பை முடித்துள்ள வெங்கட் பிரபு

தமிழ் முன்னணி நடிகர்கள் சிலர் தெலுங்கு பட இயக்குனர்களின் டைரக்ஷனில் நடிக்க விரும்புவது போல, இயக்குனர் வெங்கட் பிரபுவும் தெலுங்கில் இறங்கி அங்கேயும் தனது கொடியை நாட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இளம் நடிகர் நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து ‘கஸ்டடி‘ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினருடன் இணைந்து வெங்கட் பிரபு எடுத்த வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு படம் நிறைவடைந்துள்ளது என அறிவித்துள்ளார். குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு, நாகசைதன்யாவை அழைத்து இன்று முதல் கஸ்டடியில் இருந்து நீங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறீர்கள் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து வீடியோவின் இறுதியில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும்,  உங்கள் அனைவரையும் மே12-ம் தேதி முதல் கஸ்டடியில் எடுக்க இருக்கிறோம், தியேட்டரில் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version