முகப்பு சினிமா வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘மாவீரன்‘

வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘மாவீரன்‘

இயக்குனர் மடோன் அஸ்வின்  இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தற்போது வெளியான திரைப்படம் ‘மாவீரன்‘. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து, சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘மாவீருடு‘ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வினின் முந்தைய ‘மண்டேலா‘ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவிற்கு ரூ.30.4 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல் 3 நாட்கள் முடிவில் இப்படம் உலக அளவில் ரூ.42 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.27 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் ‘வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன்-2‘ படங்களுக்கு பிறகு 3 நாட்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை ‘மாவீரன்‘ திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் விரைவில் இப்படம் ரூ.50 கோடி வசூலை அடையும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version