முகப்பு அண்மை செய்திகள் ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் அப்டேட்டை கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

‘கேப்டன் மில்லர்‘ படத்தின் அப்டேட்டை கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரலாற்று பாணியில் உருவாகி வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ ஜூலை 28 சம்பவம் இருக்கு…. கில்லர் கில்லர்‘ என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இது ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version