தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் காமெடி நடிகரான சூரியை கதாநாயகனாக வைத்து ‘விடுதலை‘ படத்தை இயக்கியிருந்தார்.
இதில் கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதி, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், மாபெரும் வெற்றியை பெற்றது.
மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். இந்நிலையில், ‘விடுதலை-2‘ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
