தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை‘ என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனால் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய ‘மேயாத மான்‘ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை இவர் நடித்த 5 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. மேலும் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களது உள்ளாடையின் சைஸ் என்ன என்று கேட்டுள்ளார்.அதற்கு பிரியா பவானி சங்கர் என்னுடைய சைஸ் 34டி. நான் ஒன்றும் மார்பகங்களை வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கும். அவர்களின் டீ-ஷர்ட் வழியாக ஜூம் செய்து பார்த்தால் உங்களுக்கு அது தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.
