சின்னத்திரை பிரபலமான ராஜ்கமல்-லதா ராவ் தம்பதியினர் தங்களது சொந்த உழைப்பில் மதுரவாயலில் அருமையான பங்களா ஒன்றை கட்டியிருந்தனர். அந்த பங்களாவை சீரியல் மட்டும் விளம்பர பட ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த பங்களாவின் பின் பக்கம் கதவின் பூட்டை உடைத்து சில கொள்ளையர்கள் டிவி, மோட்டர் உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே தெருவில் இருக்கும் பாஜக பிரமுகரின் வீட்டின் முன் நின்ற காரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு பிரபலங்கள் குடியிருக்கும் முக்கியமான ஏரியாவில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ராஜ்கமல் போலீஸில் அளித்த புகாரின் பெயரில் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
