முகப்பு அண்மை செய்திகள் வெளிநாடுகளில் வெளியாகும் ‘கே.ஜி.எஃப்‘ திரைப்படம்

வெளிநாடுகளில் வெளியாகும் ‘கே.ஜி.எஃப்‘ திரைப்படம்

கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப்.  இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. குறிப்பாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சர்வதேச அளவில் சுமார் 1200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. மேலும் இப்படம் நடிகர் யஷ் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் ஜப்பானில் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் யஷ் வீடியோ பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version