நடிகர் விஜய் ஜூன் 17-ம் தேதி, தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில், தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 1339 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்தார். அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார். குறிப்பாக பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்க கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு, பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் விஜய் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தன்னுடைய கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த ஜூன் 22-ம் தேதியன்று எனது பிறந்த நாளில் மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் மூலமாக அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயற்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன் “ என்று நடிகர் விஜய் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
