முகப்பு அண்மை செய்திகள் சினிமாவை விட்டு விலகும் விஜய்

சினிமாவை விட்டு விலகும் விஜய்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் 14 வருடங்கள் கழித்து நடிகை திரிஷா, நடிகர் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 68-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் விஜய் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 மாணவ, மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். இதனால் திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இவர் அரசியலுக்கு வருவதற்குத்தான் இப்படி செய்து வருகிறார் என விமர்சித்து வந்தனர். அதிலும் இவர் நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள் அனைத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

இந்தநிலையில் வெங்கட் பிரபு இயக்கும் விஜய் 68 படத்திற்குபின் 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 2024 மக்களவை, 2026 சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீப காலமாக விஜய், அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version