முகப்பு அண்மை செய்திகள் பாதிக்கப்பட்டவர்களின் கருத்து ‘மாமன்னன்‘ திரைப்படம் – இயக்குனர் அமீர் விளக்கம்

பாதிக்கப்பட்டவர்களின் கருத்து ‘மாமன்னன்‘ திரைப்படம் – இயக்குனர் அமீர் விளக்கம்

அமைச்சர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்‘ இப்படத்தை ‘பரியேறும் பெருமாள், கர்ணன்‘ படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் நேற்றைய முன்தினம் திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘மாமன்னன்‘ திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர் கூறியதாவது, “ தமிழ் நாட்டில் திராவிட கருத்துகளாக இருக்கட்டும், பெரியார் கருத்துக்களாக இருக்கட்டும் திரைப்படங்கள் மூலமாக தான் இருந்தது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முன்னுரிமை அதிகம் இருக்கிறது. மாரி செல்வராஜ் மத மோதல்களை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரைப்படம் மூலமாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். எனக்கு தெரிந்து இந்த கருத்துகள் மோதல்களை ஏற்படுத்தும் கருத்தாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாக தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் “ என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version