இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்‘. இதில் நடிகர் ஜெய் கதையின் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சுவாதி நடித்திருந்தார். மேலும் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்த நிலையில், அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி ‘சுப்ரமணியபுரம்‘ திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளது. இதனை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
