முகப்பு அண்மை செய்திகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ‘லக்கி மேன்‘ டீசர்

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ‘லக்கி மேன்‘ டீசர்

தமிழ் திரையுலகின் முன்னனி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் சில காலமாக நகைச்சுவை மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் ‘லக்கி மேன்‘. இப்படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த இவர், நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படம் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகிறார். அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்தபடத்தை தின்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் இணைந்து வீரா, ரெபெக்கா, ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version