முகப்பு அண்மை செய்திகள் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் இருக்கும் பிரபல நடிகை

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் இருக்கும் பிரபல நடிகை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் நடித்த காலங்களில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியிருப்பார். பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது இவருக்கு ராதா என்கிற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது இவர் நடித்த ‘கப்சா‘ திரைப்படம் பான் இந்தியா படமாக மார்ச் 17-ல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பற்றி ஸ்ரேயா கூறுகையில், “ தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தமிழ் சினிமா எனக்கு நிறைய நல்ல படங்களை கொடுத்துள்ளது. ஷங்கர் சார் போன்ற பெரிய இயக்குனர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். திருமணமாகி குழந்தை பெற்றது, பிறகு கொரோனா என ஒரு சின்ன பிரேக் இருந்தது உண்மைதான். குறிப்பாக, கொரோனா காலத்தில், மீண்டும் வேலை செய்வோமா என்ற நிலைதான் பலருக்கும் இருந்தது.

அதனால் இனி வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன். அதேநேரத்தில், நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கும் படங்களை நாளை என் மகள் ராதா வளர்ந்து பெரியவளாகும் போது பார்த்து பெருமைப்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version