கோடைக்காலத்தில் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்புகாக அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், “கோயில்களில் தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான குடிநீர், மோர், எலுமிச்சை பானம் வழங்க வேண்டும். கோயில்களின் நடைப்பாதைகளில் வெயில் தாக்கத்தைத் தவிர்க்க, குளிர்ச்சித் தரும் வகையில் வெண்மை நிற வண்ணம் பூசப்பட வேண்டும்.
நடைப்பாதைகளில் தேங்காய் நார்களினால் ஆன தரைவிரிப்புகளை அமைக்க வேண்டும். கோயில் இடங்களில் நிழற்பந்தல் அமைத்து மின்விசிறிகள் பொருத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
