முகப்பு அண்மை செய்திகள் மீண்டும் அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகர்

மீண்டும் அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகர்

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வருபவர் சுமன். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார்.

சுமன் 1999-ல் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். 2004-ல் பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் தற்போது அரசியலில் ஈடுபடப்போவதாக சுமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திராவில் சுமன் அளித்த பேட்டியில், “ நான் மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போகிறேன். இதுகுறித்த தெளிவான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். ஆண்டு தோறும் இயற்கை சீற்றங்கள் நடக்கின்றன.

இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பிரத்யேகமான அமைப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகள் கண்ணீர் வடிப்பதற்கு முன்பே அவர்களுக்கு உதவ வேண்டும்“ என்றார்.

மேலும் சுமன் பா.ஜனதா அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version