முகப்பு அண்மை செய்திகள் கருப்பு பணத்தில் படம் எடுக்கிறேனா?….எதற்கும் ஓர் எல்லை உண்டு – ஆவேசமடைந்த நடிகர் பிருத்விராஜ்

கருப்பு பணத்தில் படம் எடுக்கிறேனா?….எதற்கும் ஓர் எல்லை உண்டு – ஆவேசமடைந்த நடிகர் பிருத்விராஜ்

தமிழில் ‘மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, கண்ணா மூச்சி ஏனடா‘ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாள யூ டீயூப் சேனல் ஒன்றில், பிருத்விராஜ் குறித்து சர்ச்சை கருத்து வெளியானது. அதில் வெளியான தகவலில், “ மலையாள திரையுலகில் 5 தயாரிப்பாளர்கள் அமலாக்கத்துறை மற்றும் வரிமானவரித்துறை விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பெற்ற கருப்பு பணத்தை மலையாள திரையுலகில் புழக்கத்தில் விடுகின்றனர்.

அதில் ஒருவர் பிருத்விராஜ். முறைகேட்டில் சிக்கியதற்காக இவர் ரூ.25 கோடி அபராதம் செலுத்தி இருக்கிறார்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பொதுவாக இதுபோன்று வெளியாகும்  விஷயங்களை  கண்டு கொள்ளாமல் நான் கடந்து சென்று விடுவேன். ஆனால் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. நான் அபராதம் எதுவும் கட்டவில்லை. எனக்கு எதிரான இந்த வரம்பு மீறிய பொய்யான தகவலை வெளியிட்டதற்காக சட்டரீதியாக சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்“ என்று கூறியுள்ளார் நடிகர் பிருத்விராஜ்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version