முகப்பு அண்மை செய்திகள் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு‘ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி.

இவர் தற்போது சமுத்திரக்கனியை வைத்து ஒரு பரபரப்பான திரில்லர் கதையை இயக்குகிறார். இதில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது.

இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். மேலும் சமுத்திரக்கனி தெலுங்கில் பவான் கல்யாணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version