உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்‘ படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின், கமல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படம் வெளியாகி 2 நாட்களிலேயே வசூலை தெறிக்கவிட்டுள்ளது. இந்நிலையில், ‘மாமன்னன்‘ படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
