தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் ‘பழனி‘ படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர். நடிகை காஜல் அகர்வால் ‘மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு தொழிலாதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நடிகை காஜல் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாததால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் இதுபற்றி அவரிடம் கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், “ சினிமாவில் இருந்து ஒரு போதும் நான் விலக மாட்டேன். ரசிகர்கள் மீது எனக்கு பெரும் அன்பு இருக்கிறது. அதை எளிதில் விட்டு கொடுக்க மாட்டேன். என் தொழில், குடும்ப வாழ்க்கை இரண்டும் தனித்தனியாகவே இருக்கிறது. அது தொடரும் “ என்று கூறியுள்ளார்.
மேலும், சமீபத்தில் அவரது நடிப்பில் ‘கோஸ்டி‘ திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன்-2‘ படத்தில் நடித்து வருகிறார்.
