முகப்பு அண்மை செய்திகள் இந்தியில் துவங்கிய பிக்பாஸ் சீசன்-2

இந்தியில் துவங்கிய பிக்பாஸ் சீசன்-2

பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் இந்தியில் துவங்கப்பட்டது. அதன் பின்னரே தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒரு புதிய முயற்சியாக பிக் பாஸ் ஓடிடி சீசன் கடந்த வருடம் முதல் முறையாக இந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல இல்லாமல் 24 மணி நேரமும் இது ஒளிபரப்பப்பட்டு வந்தது.

அதேசமயம் டிஆர்பி ரேட்டிங்கிற்காக இந்த நிகழ்ச்சியில் சில வரம்பு மீறிய காட்சிகளில் போட்டியாளர்கள் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது. இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல் சீசனை தொகுத்து வழங்கிய பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மாற்றப்பட்டு மெயின் சீசன்களை தொகுத்து வழங்கி வரும் சல்மான்கானே இந்த ஓடிடி சீசன் 2-ஐயும் தொகுத்து வழங்குகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

இதுகுறித்து அறிமுக விழாவில் பேசிய சல்மான்கான் நமது கலாச்சாரத்திற்கு எதிரான எந்த ஒரு விஷயங்களும் இந்த ஓடிடி சீசனில் நடப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version