முகப்பு அண்மை செய்திகள் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற சன்டிவி நடிகை

வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற சன்டிவி நடிகை

சன் டிவி –யில் ஒளிப்பரப்பாகும் தொடரில் நடித்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அதில் தற்போது நடிகை வாணிபோஜன் வெற்றிகரமாக வெள்ளித்திரையில் பயணித்து  வருகிறார்.

அந்த வகையில் தற்போது சன்டிவி-யில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரில் ஒன்று ‘பூவே உனக்காக‘. இதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் கன்னட திரைப்பட நடிகையான ராதிகா ப்ரீத்தி. இதில் பூவரசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை  கொண்ட அவர், சீரியலை விட்டு திடீரென விலகினார். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதாகவும், அதனால் தான் சீரியல்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ராதிகா ப்ரீத்தி தற்போது நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் ராதிகா ப்ரீத்தியும் இடம் பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version