முகப்பு அண்மை செய்திகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்ட புதுமண ஜோடி…. காரணம் என்ன தெரியுமா?

திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்ட புதுமண ஜோடி…. காரணம் என்ன தெரியுமா?

லிப்டில் ஏற்பட்ட கோளாறு காரணாமாக, திருமண ஜோடி ஒன்று தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை மாகாணத்தைச் சேர்ந்த பிரணவ்- விக்டோரியா ஜா என்ற திருமண ஜோடி, சிறப்பாக உடை அணிந்து, தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றனர். ஆனால் வரவேற்பு நடைபெறும் அரங்கத்திற்கு செல்வதற்காக அந்த ஜோடி லிப்டில் ஏறியது.

அதைத் தொடர்ந்து, லிப்டில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, புதுமண ஜோடியுடன் மேலும் நான்கு பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின், அனைவரையும் கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

இதனால் புதுமண ஜோடி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் போனது. இதன் காரணமாக, புதுமண ஜோடியின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சியும், வருத்தமுமடைந்தனர்.

இதனால் அந்த புதுமண ஜோடி மீண்டும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version