முகப்பு அண்மை செய்திகள் அதானி குழும பங்குகள் சரிந்தாலும் முதலீடுகள் அதிகரிப்பு…. இலங்கையில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்க புதிய...

அதானி குழும பங்குகள் சரிந்தாலும் முதலீடுகள் அதிகரிப்பு…. இலங்கையில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்க புதிய ஒப்பந்தம்!

அதானி குழும பங்குகள் ஒரு பக்கம் சரிவைச் சந்தித்தாலும், இலங்கையில் அதானி நிறுவனம் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் 3,654 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அதானி குழுமத்திற்கு சொந்தமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக இலங்கையின் முதலீட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 2021- ஆம் ஆண்டு 5,788 கோடி ரூபாய் மதிப்பில் கொழும்பு துறைமுகத்தில் முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வெளியான நாளில், அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைக் கண்டன. அதானி கிரீன் எனர்ஜி பங்கு 26 ரூபாய் குறைந்து 512 ரூபாய்க்கும், அதானி பவர் பங்கு 8 ரூபாய் குறைந்து 154 ரூபாய்க்கும் விற்பனையானது. அதானி குழுமத்தின் மற்ற பங்குகளும் கணிசமான சரிவைச் சந்தித்தன.

இதனால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 37,245 கோடி ரூபாய் சரிந்திருப்பதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 26ஆவது இடத்தில் இருக்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 3,49,279 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version