சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடை வாழ்க்கையை தொடர்ந்த மணிமேகலை தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார். ‘குக் வித் கோமாளி‘ நிகழ்ச்சியில் தொடர்ந்து கோமாளியாக கலக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் திருமணம் செய்துக்கொண்ட அவர்கள் தற்போது வரை தனியாக வாழ்ந்து வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது கணவர் ஹூசைனுடன் இஸ்லாமிய உடையில் மணிமேகலை இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இதை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள், மணிமேகலை இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அதற்கு பதில் அளிக்குமாறு நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் மணிமேகலை கூறியதாவது, “இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிக் கொண்டு இருப்பதற்கு போய் உருப்படுகின்ற வழியை பார்க்கலாம் இல்ல“ என பதிலடி கொடுத்துள்ளார்.
