முகப்பு அண்மை செய்திகள் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்…!

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்…!

 

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அதன்பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி‘ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ல் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவனி உயிரிழந்தார். யாஷிகா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 6 மாதங்களுக்கு பின் குணமாகி வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யாஷிகாவின் கார் விபத்து  குறித்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 21-ம் தேதி யாஷிகா நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற ஏப்ரல் 25-க்குள் யாஷிகா ஒருவேளை ஆஜராகவில்லை என்றால் அவர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version