முகப்பு அண்மை செய்திகள் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்து தனி விமானத்தில் சென்னை வந்தடைந்த ‘லியோ‘ படக்குழு

காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்து தனி விமானத்தில் சென்னை வந்தடைந்த ‘லியோ‘ படக்குழு

 

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் என பல முன்னணி பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று  வந்தது. நடிகர் விஜய் நேற்றைய முன்தினம் (மார்ச் 22) தனது பகுதி படப்பிடிப்பு முடிவடைந்ததால் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பினார்.

இந்நிலையில்  ‘லியோ‘ படத்திற்கான காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றதால் நேற்று படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் சென்னை திரும்பி உள்ளனர். இதையடுத்து சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

 

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version