தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தனம். இவர் கடந்த சில வருடங்களாக காமெடியை விட்டுவிட்டு கதையின் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி, இவன் வேற மாதிரி‘ ஆகிய படங்களில் நடித்த நடிகை சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே.எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் இப்படம் வருகிற ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
