முகப்பு அண்மை செய்திகள் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்…. நண்பனாக மாறிய பறவை!

உயிரைக் காப்பாற்றிய இளைஞர்…. நண்பனாக மாறிய பறவை!

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய இளைஞரை விட்டு, பிரிய மனமின்றி நாரை ஒன்று செய்யும் செயல் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரீஃப் என்பவர், ஓராண்டுக்கு முன்பு சாலையோரத்தில் காயமடைந்து கிடந்த நாரையை மீட்டு சிகிச்சை அளித்து இருக்கிறார். மேலும், நாரை குணமாகும் வரை தனது வீட்டிலேயே வைத்து, அதற்கு உணவளித்து வந்திருக்கிறார். இதனால் நட்பு மிகுந்த நாரை ஆரீஃப் எங்கு சென்றாலும் நிழல் போல் பின் தொடர்ந்து, அவருடன் செல்கிறது.

இரு சக்கர வாகனத்தில் சென்றாலும், அவர் மீது அமர்ந்துக் கொண்டும், அவரை பின் தொடர்ந்துப் பறப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தக்க நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய இளைஞரை விட்டுப் பிரிய மனமின்றி நாரை செய்யும் செயல் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version