முகப்பு அண்மை செய்திகள் ‘இந்தியன்-2‘ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது

‘இந்தியன்-2‘ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு  அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் ‘இந்தியன்-2‘ படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலைய ஆணையத்திடம் படக்குழு ரூ.1.24 கோடி கட்டணமாக செலுத்தி முன் அனுமதி பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘இந்தியன்-2‘ திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version