முகப்பு அண்மை செய்திகள் செப்டம்பரில் வெளியாகும் ‘சந்திரமுகி-2‘

செப்டம்பரில் வெளியாகும் ‘சந்திரமுகி-2‘

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘சந்திரமுகி‘. இதில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்கியுள்ளார் பி.வாசு. இதில் கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, வடிவேலு, ராதிகா சரத்குமார் என இதில் பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் நிலையில், எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர், மும்பை போன்ற இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு நேற்று (ஜூன்.29) மாலை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version