தமிழில் கதாநாயகனாகவும், முக்கிய வேடங்களிலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் தனது 50-வது படத்தை நெருங்கியுள்ளார். இவரது 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை‘ இயக்குனர் நிதிலன் இயக்க உள்ளார். இந்தப்படத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டியும் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சுதன் கூறுகையில், “நாங்கள் தயாரிக்கும் படம் விஜய் சேதுபதியின் 50-வது படம் என்பது எங்களுக்கே ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஆக்ஷன் – பழிவாங்கும் படமாக உருவாக இருக்கும் இந்தக் கதையில், இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.
இப்படத்தை 85 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த நிலையில் தற்போது 50 நாட்களுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளோம். அடுத்த பத்து நாட்களில் விஜய் சேதுபதிக்கான முழு படப்பிடிப்பும் முடிந்து விடும்“ என்றார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்‘, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்‘ மற்றும் மணிகண்டன் இயக்கும் புது வெப்சீரிஸ் ஆகியவற்றை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
