நடிகை பிரியங்கா அருள்மோகன், 2019-ல் வெளிவந்த ‘ஒந்த் கதே ஹெல்லா‘ என்ற கன்னடப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பின் தெலுங்கில் நானி ஜோடியாக ‘கேங் லீடர்‘ படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். மேலும் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்‘ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ‘எதற்கும் துணிந்தவன், டான்‘ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ்க்கு ஜோடியாக ‘கேப்டன் மில்லர்‘ படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க உள்ளார். சுஜித் இயக்கத்தில் பவன்கல்யாண கதாநாயகனாக நடிக்கும் ‘ஓஜி‘ என்ற படத்தில் பிரியங்கா கதாநாயகியாக நடிக்க ஓப்பந்தம் ஆகியுள்ளார்.
இது பற்றிய அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஆக்க்ஷன் படமாக இப்படம் உருவாக உள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் முதன்முறையாக பிரியங்கா அருள்மோகன் தெலுங்கில் டாப் ஹீரோ ஒருவருடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
