முகப்பு அண்மை செய்திகள் விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘விடுதலை‘

விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘விடுதலை‘

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி இணைந்து நடித்த ‘விடுதலை‘ படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படம் தெலுங்கில் வெளியாகி அங்கும் நல்ல வசூலை பெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக சில காட்சிகளை ஷூட்டிங் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் நீளம் கருதி திரையரங்கில் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் போது இணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version