முகப்பு அண்மை செய்திகள் சமந்தாவின் ‘குஷி‘ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

சமந்தாவின் ‘குஷி‘ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

நடிகை சமந்தா சில காலமாக உடல்நிலை பாதிப்பால் மிகவும் மோசமான நிலைமையில் இருந்து வருகிறார். உடல்நிலை பாதிப்பிலும் ஓய்வு எடுக்கமால் படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘யசோதா‘ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் வெளியான ‘சாகுந்தலம்‘ படமும் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் சிவா நிர்வணா இயக்கத்தில் சமந்தா தற்போது ‘குஷி‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் நிலையில், ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி திரையில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தபடம் தெலுங்கு தவிர தமிழிலும் வெளிவருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய ‘என் ரோஜா நீயே….‘ என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version