முகப்பு அண்மை செய்திகள் விவகாரத்தை உறுதி செய்த பிரபல சின்னத்திரை நடிகை!

விவகாரத்தை உறுதி செய்த பிரபல சின்னத்திரை நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து‘ தொடரில் இணைந்து நடித்த விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இவர்கள் திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமிலும் ஒருவரையொருவர் அன்பாலோவ் செய்துள்ளதுடன் தங்களது திருமண புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்யுக்தா வெளியிட்ட சமீபத்திய பதிவில், ‘எனது அருமை ஹேட்டர்ஸ்…. நீங்கள் நினைத்தது போலவே நடந்துவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதேசமயம் இனி தான் என் வாழ்க்கை ஆரம்பமாகிறது. இனிமேல் என் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாது. எனவே, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்‘ என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version