முகப்பு அண்மை செய்திகள் ‘ஜெயிலர்‘ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

‘ஜெயிலர்‘ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

இதில் ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினி நடித்துள்ளார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை வரும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version