முகப்பு அண்மை செய்திகள் ‘அயலான்‘ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

‘அயலான்‘ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ‘பிரின்ஸ்‘ திரைப்படம் வெளியாகி இருந்தது. அதன் பிறகு வேறு எந்த படமும் வெளிவரவில்லை. அவர் தற்போது நடித்து முடித்து திரையில் வெளியாக இருக்கும் படம் ‘மாவீரன்‘. மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த படமும் சூப்பராக தயாராகி இருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தயாரான இப்படம் ரிலீஸிற்காக மட்டுமே காத்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பட வெளியீடு குறித்த தகவல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அயலான்‘ படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது என அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version