முகப்பு அண்மை செய்திகள் நடிகர் சரத்பாபுவுக்கு தீவிர சிகிச்சை..! கைவிரித்த மருத்துவர்கள்!

நடிகர் சரத்பாபுவுக்கு தீவிர சிகிச்சை..! கைவிரித்த மருத்துவர்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு. இவருக்கு வயது 71. சமீபத்தில் இவர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை மேலும்  மோசமான நிலையில் கடந்த 20-ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், இன்னும் கூடுதல் நேரம் கடந்த பின்புதான் முழுமையான தகவலை அளிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version