முகப்பு அண்மை செய்திகள் ஹீரோவாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

ஹீரோவாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லெட்ஸ் கெட் மேரிட்‘. இந்த படத்தை தோனி எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் டோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையடுத்து ‘லெட்ஸ் கெட் மேரிட்‘ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் டோனியின் மனைவி சாக்ஷி பேசியதாவது,  “ கதை நன்றாக அமைந்தால் டோனி ஹீரோவாக நடிப்பார். அவர் கேமராவைப் பார்த்து வெட்கப்படுபவர் இல்லை. 2007-ல் இருந்து நிறைய விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், எப்படி நடிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அப்படி அவர் நடித்தால் ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்வார் “ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version