கடந்த 2004-ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘ 7ஜி ரெயின்போ காலனி‘. இதில் ஹீரோவாக ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதியிருந்த நிலையில், அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் செல்வராகவன்.
முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். இந்நிலையில் முதல் பாகத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் ‘விருமன், மாவீரன்‘ படங்களில் நடித்த நடிகையும் மற்றும் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
