முகப்பு அண்மை செய்திகள் வைரலாகி வரும் ராம் சரணின் போட்டோ

வைரலாகி வரும் ராம் சரணின் போட்டோ

நடிகர் ராம் சரணுக்கு ஜூன் 20-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், இன்று அவரின் மனைவி உபாசனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, மருத்துவமனையில் இருந்து குழந்தையோடு செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன், ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன பின்னர், உபாசனா கர்ப்பமாக இருந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு செவ்வாய் கிழமை ஜூன் 20-ம் தேதியன்று, ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதே போல் குழந்தையையும், உபாசனாவையும் பார்க்க அல்லு அர்ஜுன், நிஹாரிகா, பவன் கல்யாண் உள்ளிட்ட சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பலர் தொடர்ந்து வருகை தந்தனர்.

இந்நிலையில் குழந்தை பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில், இன்று உபாசனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கையில் ஏந்தியபடி, ராம் சரண் தன்னுடைய மனைவியுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version