முகப்பு அண்மை செய்திகள் சமூக சேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த ரஜினிகாந்த்

சமூக சேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறன் என்பவருக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

மணிமாறன் என்பவர் ஆதரவற்ற நபர்கள் மரணம் அடைந்துவிட்டால் அவர்களின் உடல்களை அரசு மருத்துவனையில் இருந்து பெற்று அவற்றை நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 வருடங்களாக அவர் இந்த சேவையை செய்து வருகிறார். அது மட்டுமின்றி தொழு நோயாளிகளுக்கும் அவர் உதவி செய்து வருகிறார்.

இதன் காரணமாக மணிமாறனின் சேவையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருது வழங்கியுள்ளன. கொரோனா காலத்திலும் இறந்தவர்களின் உடல்களை இவர் அடக்கம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது சேவையை அறிந்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது அறக்கட்டளை சார்பில் அவருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இந்த சேவையை தொடர்ந்து செய்யுமாறும் அவருக்கு ரஜினிகாந்த் ஊக்கமளித்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version